அமைதி முயற்சிகள்

தனி மனித அதிகாரமளித்தலின் மூலம் வெளி அமைதிக்கு ஸ்ரீ ஸ்ரீயின் தனித் தன்மை வாய்ந்த அணுகுமுறைகள் உலகைத் தாண்டி முரண்பாடான இடங்களில் என்றும் மாறாத மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த அணுகுமுறையோடு சுய முன்னேற்றத் திட்டங்களும், அஹிம்சை கொள்கைகளும், பேச்சுத் தொடர்புகளும், புனர்வாழ்வுத் திட்டங்களும் சேர்ந்து சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவிலும், ராணுவத்தினர் முதல் இளைஞ்சர்கள், குற்றவாளிகள் பாதுகாப்பு படையினர், முதலானோரை வெறுப்பு, காழ்ப்புணர்வு, வன்முறை இவற்றிலிருந்து மாற்றி மகிழ்ச்சியடைய உதவியது.

 

சச்சரவால் கிழிக்கப்பட்ட ஈராக்கை மீண்டும் இணைத்தல்

தொடர்ந்த வன்முறையால் பாதிக்கப்பட்டு,சொத்தையும்,மக்களையும் இழந்துள்ள ஈராக், 2007 Failed -States Index-ன்படி உலகிலுள்ள இரண்டாவது மிக உறுதியற்ற தேசமாகும். செப்டம்பர் 2003 முதல், பாக்தாத், பாஸ்ரா, சுலேய்மேனியா, கர்பாலா முதலிய இடங்களிலிருந்து 5000க்கும் மேற்பட்டவர்கள் வாழும் கலையின் பாதிக்கப்பட்டவரின் உதவி நிவாரண திட்டங்களில் பங்கேற்றனர். இந்த திட்டங்களால் அடைந்த பலன்களால் தூண்டப்பட்டு 2006 ல், இந்தப் பகுதிகளிலிருந்து 43 பேர் இந்த திட்டத்தைப் பயிற்றுவிப்பவர்களாக தானே முன் வந்துள்ளனர். இப்பொழுது 50 வாழும் கலை பயிற்றுவிப்பாளர்களும் , 150 பதிவு செய்ததில் தொண்டர்களும் இந்த தேசத்தில் உள்ளனர்.

 

iraq_1.jpg

2005 ல் ஆரம்பிக்கப்பட்ட ஈராக் பெண்கள் அதிகார திட்டத்தின் மூலம் சுமார் 500 ஈராக்கிய பெண்கள் பலனடைந்தனர். இந்த சமூகத்தில் மேலும் நன்மதிப்பைப் பெற்றுள்ள இந்த திட்டம், சுய முன்னேற்ற திட்டம், சொல் தொகுத்தலில் தொழில் பயிற்சி, ஈராக்கிய பெண்களுக்கு தையல் இவற்றை அளிக்கிறது.

 

 

iraq_2.jpg

மே 22 , 2007 ல் ஈராக் அரசின் அழைப்பை ஏற்று ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் மூன்று நாட்களுக்கு சமாதானத் rara
தூதுவராக சென்றார். இந்த தேசத்தை பார்வையிட்ட முதல் அந்திரி இநதியா ஆன்மீகத் தலைவராக ஆனார். பிரதம மந்திரி Nouri -al -Maliki அவர்கள்,ஈராக்கை மாற்றி அமைத்ததில் வாழும் கலை அமைப்பின் முக்கிய பங்கை வலியுறுத்திக் கூறினார். அந்நாட்டின் சிறைகளில் வாழும் கலை சிறை சீரமைப்பு நிகழ்ச்சியை நடத்த அழைப்பு கொடுத்துள்ளார்.

 

iraq_3.jpg iraq_map.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

அவர் பார்வையிட்டபோது, இளைய மந்திரிகள், பார்லியமென்ட் மெம்பர்கள் மூன்று எதிர் தரப்பு தலைவர்கள் (Shiyas , Sunnis , and Kurds ) ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தி அஹிம்சைக்கும், அமைதிக்கும் ஒரு சந்தர்ப்பம் அளிக்குமாறு துரிதப்படுத்தினார். இதன் விளைவாக ஆகஸ்ட்,2007 ல் பக்ஹ்டாத் , பாஸ்ரா, சுலய்மானியா, கர்பல நஜப் ஆகிய இடங்களிலிறுந்து 55 ஈராக்கிய இளைஞர்கள் பெங்களூர் சென்று ஒரு மாதத்திற்கு இளைஞர் தலைமை பயிற்சிக்கான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இளைய தலைவர்களாக ஆயினர்.

 

இளைஞர்களை அஹிம்சை வழியில் செல்ல ஆயத்தப்படுத்துதல்
ஈராக்கில் எல்லா இடங்களிலும் கோபமும், வெறுப்பும் உள்ளது. ஈராக்கியர் கோபத்தை எப்படி அடக்குவது, நிகழ்காலத்தில் எப்படி இருப்பது என்பதை அறிய வேண்டும். இதற்கு மன மாற்றமும், இதய மாற்றமும் தேவை. இங்குதான் ஆன்மிகம் மிகப் பெரிய பங்கை வகிக்கிறது. இந்த செயல் முறைக்கு உதவி செய்ய நாங்கள் வேலை செய்கிறோம் -- ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

நன்நடத்தை நற்சாட்சிப் பத்திரம்
"நிறைய பலத்துடன், நிறைய சக்திகள் இருக்கின்றன.ஆனாலஅவைகள்மக்களின் இதயத்தையும்,மனதையும் ஒன்று சேர்க்க முடியவில்லை. இந்த வேலையை ஆன்மீக குருவால் மட்டுமே செய்ய முடியும்"
- ஈராக் பிரதம மந்திரி -- நூரி அல் மலீக்கி (ஈராக் பிரதம மந்திரி )

"நாங்கள் திறந்த கைகளுடனும், இதயத்துடனும் உங்கள் பிரதிநிதியை வரவேற்கிறோம். உங்களை எங்கள் சகோதரர் போல் வரவேற்று உங்களுடன் கை கோர்த்து செயல்பட தயராகயிருக்கிறோம்."
- ஷியா தலைவர் அயடோல்லாஹ் முஹம்மத் யகுபி

"எங்களுக்கு இறப்பும், நம்பிக்கையின்மையும் தான் தெரியும். இப்பொழுது எங்களால் சிரிக்க முடியும். ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் எங்களுக்கு அளித்த மிகப் பெரிய பரிசு இதுதான்"
- ஷபிகுர் ரெஹ்மான்