பேரிழப்பிற்கான உதவி

மனிதனாலோ அல்லது இயற்கையாலோ ஏற்பட்ட பேரிழப்புகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மனம், உணர்வு, பொருள் தேவைக்காக ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் பொருளுதவி, மனவேதனைக்கான உதவி, மற்றும் நீண்ட கால சீரமைப்புத்திட்டம் ஆகிய மூன்று நிலைகளில் தலையிடும் நிகழ்ச்சி ஒன்றை வடிவமைத்தார்.

 

உடனடி பொருளுதவியும், சேவையும்: பெருந்துன்பத்தின் பின் விளைவுகளால் பாதிக்கப்பட்ட்டவர்களுக்கு உணவு, உடை, மருந்துகள் மற்றும் தங்கும் இடம் அமைத்துக் கொடுத்தல்.

குறுகிய கால மனவேதனைக்கான உதவி: உணர்வாலும், மனவேதனையாலும் பாதிக்கப்பட்டவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சிகளும், ஆலோசளைகளும்

 

நீண்டக்கால மறுசீரமைப்புத் திட்டம்: வீடுகள்,சுகாதார அமைப்புகள்,பாதைகள். பள்ளிகள், தொழிற்பயிற்சிக்கூடங்கள் கட்டுதல்

 

disrelief_2.jpgமனவேதனையிலிருந்து விடுவிக்கப்படாவிட்டால், உணவும், மருந்துகளும் வேலை செய்யாது . அவர்களின் மனம் முழுவதும் அவர்களை வீழ்த்திய துன்பமே இருப்பதால், அவர்களால் உண்ணவோ, உறங்கவோ முடியாது என ஸ்ரீ ஸ்ரீ சொல்கிறார். குணப்படுத்தும் ஸ்பரிசத்தையும், எதிர்காலத்திற்கான பார்வையையும், ஆதரவையும் பேரிழப்பிற்கு அல்லானவர்களுக்கு கொடுத்தால், அவர்களுடைய வாழ்க்கையை மீட்டுக் கொடுக்க முடியும்.

Disaster Relief Initiatives
Partial Listing

 

வெள்ள நிவாரணம், பீகார் மற்றும் வாடா கிழக்கு இந்தியா

வர்ஜீனியா டேக் வளாக துப்பாக்கி சூடு, அமெரிக்கா (ஏப்ரல் 2007)

விதர்பா விவசாயி தற்கொலைகள், இந்தியா (2007 - தொடர்ந்து )

சூரத் வெள்ளம், இந்தியா (ஆகஸ்ட் 2006 )

லெபனான் (2006ல் இருந்து)

மும்பை ரயில் வண்டி குண்டு வெடிப்பு, இந்தியா (2006)

காஷ்மீர் பூகம்பம் (அக்டோபர் 2005 )

சூறாவளி கற்றீனா, அமெரிக்கா (ஆகஸ்ட் 2005)

மும்பை வெள்ளம், இந்தியா (ஜூலை 2005)

குஜராத் வெள்ளம், இந்தியா (ஜூன் 2005)

இந்தியப் பெருங்கடல் சுனாமி (டிசம்பர் 2004)

லண்டன் பாதாளத் தொடர் உந்து தாக்குதல், இங்கிலாந்து, (ஜூலை 2005)

பெஸ்லான் பள்ளி பிணைக் கைதி நெருக்கடி, ரஷ்யா (செப்டம்பர் 2004)

மாட்ரிட் ரயில் வண்டி தாக்குதல், ஸ்பெயின் (மார்ச் 2004)

ஈராக் பேரதிர்ச்சி நிவாரணம், (2003ல் இருந்து)

இஸ்ரேல் பேரதிர்ச்சி நிவாரணம், (2003ல் இருந்து)

9/11 தீவிரவாதி தாக்குதல், அமெரிக்கா (செப்டம்பர் 2001)

 

 

சீனா பூகம்பம்:
சீனாவில் ஏற்பட்ட பூகம்பத்தின் விளைவாக, ஸ்ரீ ஸ்ரீயின் தொண்டர்கள் பிழைத்தவர்களுக்கு மனவேதனையை நீக்கி, தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள். பூகம்பம் ஏற்பட்ட இடத்திலிருந்து 100 கி.மீ.தள்ளி உள்ள செங்க்டு என்ற இடத்தில் மனவேதனை அடைந்தவர்களுக்கான நிவாரணத்திற்காக பயிலரங்குகளை நடத்துகின்றனர்.

 

தென்கிழக்கு ஆசியா சுனாமி:
2004ல் சுனாமி ஏற்பட்ட சில மணி நேரங்களுக்குள் பாதிக்கப்பட்ட பகுதிகளில், 5000 க்கும் மேற்பட்ட வாழும் கலை அமைப்பின் தொண்டர்கள் அவசர கால நிவாரண முயற்சிகளையும், மனவேதனை அடைந்தவர்களுக்கான ஆலோசனை முயற்சிகளையும் மேற்கொண்டனர். இத்துயர சம்பவம் ஏற்பட்ட சில நாட்களுக்குள்,ஸ்ரீ ஸ்ரீ சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார்.

 

ஸ்ரீ லங்கா:
இலங்கையில் மனவேதனை அடைந்த நூற்றுக்கணக்கானவர்களுக்கு உதவும் நிகழ்ச்சிகளும், ஆலோசனை கூட்டங்களும் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளால் 25000 க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். வாழும் கலை அமைப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கான நீண்ட கால மறு சீரமைப்புத் திட்டங்களையும் தொடங்கியது. நாகப்பட்டினத்தில் (தமிழ்நாடு, இந்தியா) இந்த அமைப்பு சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச கல்வி உதவிகளையும், 120 வீடுகள்கட்டி, தொழிற்பயிற்சி மையங்களையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

 

 

Testimonials

சுனாமிக்குப்பிறகு நிறைய "என் ஜி ஒ" நிறுவனங்கள் சாப்பாடு மற்றும் பொருட்கள் கொடுத்தன. ஆனால் மன வேதனையை போக்க வாழும் கலை நிறுவனம் ஈடுபட்டது. 35000க்கும் மேலானோர் வாழும் கலை நிகழ்ச்சிகளால் பயனடைந்தன. .”
- தென்காசி ஜவாஹர், நாகப்பட்டினம், மாவட்ட கலெக்டர்.

வாழும் கலை நிறுவனம் எங்களுதன் ஒத்தொழைத்து மன வேதனையை போக்க செயல் பட்டு வருகிறது. இங்கே அவர்களின் தொண்டர்கள் முழு சமயமும் இருக்கிறார்கள். எனக்கு மகிழ்ச்சி எதனால் என்றால் அவர்கள் எல்லோருடனும் சேர்ந்து, இங்கே வசிக்கும் மக்களையும் ஈடுபுத்தி செயல் படுகின்றனர். அதனால் இப்பொழுது இந்த வேலை இப்பொழுது பொது மக்களாலும் செய்யப்பட்டு வருகிறது. வாழும் கலையின் சேவையை நாகப்பட்டினம் மறக்காது. அவர்களின் மதிப்பு-சார்ந்த சேவையினால் நாகப்ப்டினரின் வாழ்க்கை தரம் உயரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
- டாக்டர். ஜ. ராதாகிருஷ்ணன், முன்னாள் நாகப்பட்டினம், மாவட்ட கலெக்டர்.