பெண்களுக்கு அதிகாரமளித்தல்
"சமூக முன்னேற்றத்திற்கு பெண்களின் பங்கு மிக முக்கியமானதாகும். உண்மையில், ஒரு சமுதாயம் பலமாகவும், ஒற்றுமையாகவும் உள்ளதா, இல்லையா,என்பதை இந்த ஒன்றுதான் தீர்மானம் செய்கிறது. பெண்கள்தான் சமுதாயத்தின் முதுகெலும்பு" - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
நம்பிக்கையையும், சுதந்திர உணர்வையும் உண்டு பண்ணுதல்
ஸ்ரீ ஸ்ரீ யின் தனித் தன்மை வாய்ந்த முயற்சியான , பெண்களுக்கு அதிகாரமளித்தல் திடடம், தொழிற் கல்வி, நுண் பொருளியல் துணிகரச் செயல் சலுகைகள், சுய-முன்னேற்ற பயிலரங்குகள், உலகில் வசதியற்ற நிலையிலுள்ள பெண்களுக்கான சுய உதவிக்குழு இவற்றை அளிக்கிறது. இந்தத் திடடம் விஸ்டா இந்தியா (எல்லோருக்கும் ஒருங்கிணைந்த சேவை) என்ற பெயரில் 1985 ல் பெங்களுரு, இந்தியாவில் தொடங்கப்பட்டு, இதனால் 200 க்கும் மேற்பட்ட கிராமப் பெண்கள் பலனடைந்தனர். இந்தத் திட்டத்தின் வெற்றியினால் ஊக்கப்படுத்தப்பட்டு, இந்தியாவின் மற்றப் பகுதிகளிலும், மற்றும் ஸ்ரீலங்கா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஈராக் போன்ற நாடுகளிலும் இத்திட்டம் திரும்ப செய்யப்பட்டது.
தென் ஆப்பிரிக்காவில் ஓஹ்லான்ஜி இனத்திலிருந்து பங்கேற்ற 30 பெண்கள், ஆப்ரிக்காவின் சிறுமணி கோக்கும் நுண்ணிய கலையை கற்றுக்கொண்டனர்.மேலும், 300 பெண்கள் சுய முன்னேற்ற பயிலரங்குகளில் கலந்துக் கொண்டனர்.இப்பொழுது இவர்கள் தவறாமல் தியானம் மற்றும் பாட்டு பயிலரங்குகளை நடத்தி, மற்றும் வெற்றிகரமான சிறுமணி கோக்கும் பணியை தொடங்கியுள்ளனர்.
- மூசி மாபுமொலோ, ஓஹ்லன்ஜி சிறுமணி திட்டம் ஒருங்கிணைத்தாளர்.
"நான் 300 பெண்கள் கொண்ட ஒரு சுய உதவி கூடத்தின் தலைவி. இவர்களுக்கு பயிற்சி அளிக்கவும், நம்பிக்கையை வளர்ப்பதற்கும், மேலும் தேர்வில் பங்குகொள்ளவும், சமூக தலைவிகலாகவும், மற்றும் தொழில் அதிபர்கலாக்கவும் வாழும் கலையின் உதவி எங்களுக்கு தேவை."
இந்தியாவில் ஜார்கண்ட் என்னும் இடத்தில், பெண்களுக்கு தேன் தயாரிக்கும் முறையையும், நாட்டின் முன்னணியில் இருக்கும் தேன் தயாரிப்பாளர்களுக்கு அதை வழங்கவும் பயிர்ற்றுவித்தனர். மற்றுமொரு சிறந்த துணிகர முயற்சியை, புனர்னவாதிட்டத்தை, பெங்களுரு மத்திய சிறைச்சாலையில், வாழும் கலை அமைப்பு ஆரம்பித்து, அங்குள்ள பெண்களுக்கு ஊதுபத்தியும், அலங்காரப்பொருட்களும் செய்ய கற்றுக்கொடுத்தனர். அவற்றை விற்பதிலிருந்து வரும் லாபம் ,அந்தப் பெண்கள் சிறையிலிருந்து விடுதலையானதும் அவர்களுக்கு பொருளாதார பாதுகாப்பாக அமையும். இந்தியாவில் மற்ற சிறைகளிலும் இதே போன்ற திட்டங்கள் தொடங்கப்பட்டன.