பணியில் இருந்து ஓய்வுபெற்ற படைவீரர்கள் நிகழ்ச்சி

"ப்ராஜெக்ட் வெல்கம் ஹோம் ட்ரூப்ஸ்" என்பது போர்ப்படையிலிருந்து ஒய்வு பெற்ற படைவீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் மனவுளைச்சல், மனவேதனைக்கு தீர்வு காணும் பொருட்டு, வாழும் கலை அமைப்பின், மிக சமீப காலத்திய, புதிய முயற்சிகளில் ஒன்றாகும். இந்த புதிய முயற்சி மனவேதனையைத் தீர்க்கும் பயிலரங்குகள், சுய முன்ன்ற்ற நிகழ்ச்சிகள் இவற்றை இதில் பங்கேற்பவர்களுக்கு அளிக்கிறது. இங்கு மனவுளைச்சல், கவலை, உறக்கமின்மை,மனத்தளர்வு இவற்றைக் குறைக்கும் ஒப்புயர்வற்ற மூச்சுப் பயிற்சியை இவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.

Testimonials
எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பயன் - என்னால் இப்பொழுது தூங்க முடிகிறது! தூக்கம் இல்லையென்றால் மெதுவாக உடல் நாசமாகிறது. அது தான் எனக்கும் நடந்துக்கொண்டிருந்தது. இந்த நிகச்சியை நான் தூங்குவதற்கும் அமைதியை அனுபவிப்பதற்கும் ஒரு வழியாகக் கருதுகிறேன்.
- ட்ராய் ஜாக்சன், தேசெர்ட் ஸ்டார்ம் மற்றும் ஈராக் போர் முன்னால் ராணுவ வீரர்.

 

 

ப்ராஜெக்ட் வெல்கம் ஹோம் ட்ரூப்ஸ்
கென்னடி சென்டரில் இந்த அமைப்பின் 25 வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் போது,மார்ச்,28 ,2007 ல் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில், தலைவரும், தேசிய படை வீரர் அமைப்பின் ஸ்தாபகருமான ப்லோயிட் 'ஷாத்' மேஷாத், திரும்பும் படைவீரர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும்,ஸ்ரீ ஸ்ரீ யின் தலை சிறந்த சேவைக்காக மரியாதை செய்தார். "நம்முடைய படைகளுக்கு மன அமைதியை கொண்டு வரவும், திரும்பவும் சமுதாயத்துடன் இணையவும், நாம் எது செய்தாலும், அது தங்கத்தின் எடைக்கு சமம்" என்று மேஷாத் கூறினார்.