சிறைக்கைதிகளின் புனர்வாழ்வுத் திட்டம்

"உன் பார்வையை விரிவாக்கிப் பார்த்தால் ஒவ்வொரு குற்றவாளிக்குள்ளும் ஒரு பாதிக்கப்பட்டவர் இருந்துகொண்டு உதவிக்காக அழுது கொண்டிருப்பார். நீ அந்த பாதிக்கப்பட்டவரை குணப்படுத்தினால், இந்த கோள் கிரகத்திலிருந்து குற்றத்தை நீக்கிவிடுவாய்" - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

 

prisoner_rehab1.jpg ஒவ்வொரு குற்றவாளியினுள்ளும் இருக்கும் பாதிக்கப்பட்டவருக்கு உதவுதல்
சிறைக் கைதிகள் சமுதாயத்தோடு ஒன்றிணைந்து தங்களைத் தாங்களே குணப்படுத்திக் கொள்ளும் பொருட்டு ஸ்ரீ ஸ்ரீ 1990 ல் சிறைத் திட்டத்தை ஆரம்பித்தார். இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சம் மனித நேயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சுய முன்னேற்ற பயிலரங்கமும், சிறிய நிதி சலுகைகளும் மற்றும் தொழிற் பயிற்சியும் ஆகும். இந்தத் திடடம் சட்ட அமலாக்க அலுவலர்களுக்கும் நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

தைவானிலுள்ள "தைபெய் து -சென்" சிறை மற்றும் "தைசுங்" சிறையில் நடைபெற்ற சுய முன்னேற்ற சிறை நிகழ்ச்சியில் பங்கேற்ற 604 பேர்களிடம் ஆராய்ந்தபொழுது பாதிக்கும் மேற்பட்ட பங்கேற்றவர்கள் கோபம்,மன அழுத்தம், பயம், உறக்கமின்மை போன்ற எதிர் மறையான உணர்வுகளில் குறிப்பிடத் தக்க மாற்றம் இருப்பதாக அறிவித்தனர்.

 

உலகம் முழுதுமுள்ள சிறைக்கைதிகளின் புனர்வாழ்வுப் பணி
இந்தியா, ரஷ்யா, தென் ஆப்ரிக்கா.அமெரிக்கா, நமிபியா, தாய்லாந்த், நியூ சிலாந்து, குர்ந்சீ, கென்யா, மெக்ஸிகோ, லித்துவானியா, புல்காரியா, கொசோவோ , இங்கிலாந்த், டென்மார்க், சிங்கப்பூர், பிஜி, ஸ்காட்லான்ட், தைவான், நோர்வே , க்ரோயேசியா.

 

இந்தியாவின் சில மிக மோசமான குற்றவாளிகளின் வீடான திஹார் சிறையில், கைதிகள் புனர் வாழ்வுப் பணி, 1999 ல்தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி திஹாரிலுள்ள மொத்தம் 17, 8 சிறைகளில் செயல்பட்டு வருகிறது. 30000 க்கும் மேற்பட்ட கைதிகள் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

நியூ சிலாந்தில் இளைஞர் நீதிப் பிரிவுடன் இணைந்து இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. மலாவி ஹசிலி சிறையில் இந்த நிகழ்ச்சி ஆச்சரியப் படத் தக்க வகையில் பலன்களை பார்த்தது. அரேபியாவில் அல் வத்பா பெண்கள் சிறையில், இந்த நிகழ்ச்சி வரவேற்கப்பட்டது. டென்மார்க்கில், ஒரு திருப்புமுனையாக அமைந்த தீர்மானத்தில், நீதித் துறை அமைப்பு இளைஞர் குற்றவாளிகளை சிறைக்கு அனுப்பாமல், அவர்களை வாழும் கலை அமைப்பின் நிகழ்ச்சிகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கட்டளையிட்டது. பிஜி, கொசோவோ, மற்றும் ஈராக்கில் எல்லா பகுதிகளிலும் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தாய்வானின் "ஆப்டர் கேர் கூட்டமைப்பு" இந்த அமைப்பின் முயற்சிகளை 2005 ல் அங்கீகரித்தது.

சமீபமாக, இந்த அமைப்பு ஸ்ரிஜன் (கைதிகளுக்கு சமூக புனர்வாழ்வுப் பணி மற்றும் வறுமையில் இருப்பவர்களுக்கு உதவி) என்னும் புது முயற்சியை அறிமுகப்படுத்தியது. ஸ்ரிஜன் சிறைக்கைதிகளுக்கு திரையரங்கம், பாட்டு, நடன அரங்குகள், ஆளுமை முன்னேற்றம் முதலியவற்றில் வாய்ப்புக்களை அளிக்கிறது. இந்த புது மயற்சி, வர்த்தகக்கலை, உடை, நகை, அலங்கார தொழில் நுட்பம்,மற்றும் நெசவு முதலிய தொழில்முறை பயிற்சிகளை அளிக்கிறது மூன்று ஸ்ரிஜன் பயிலரங்குகள் நியு டெல்லி, இந்தியாவில் சமீபமாக நடைபெற்றன. அதில் சிறைக்கைதிகளுக்கு அலுவலக பொருட்கள், பரிசுப் பெட்டிகள், விளக்குகள் முதலியவற்றை உருவாக்க பயிற்றுவிக்கப்பட்டது.

இந்த அமைப்பு உள்ளூர் அரசை சேராத நிருவனங்களுடனும் மற்றும் பங்குதாரர்களோடு இணைந்து இந்த கைவினைப் பொருட்களை இந்தியா, மற்றும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கிறது. எல்லா லாபமும் கைவினைத் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்டு, அவர்களை சுதந்திரமாக இருக்கச் செய்கிறது.

 

Testimonials
"முதலில் சண்டை போடுவதற்காக காத்துக்கொண்டிருப்பேன். ஆனால் வாழும் கலை பயிர்ச்சிக்குப்பின் இப்பொழுது சண்டை வந்தால் என்னால் அதை விட்டு விலகிச்செல்ல முடிகிறது."
- போல்ல்ச்மூர் சிறைச்சாலை (தென் ஆப்ரிக்கா) கைதி
"போரால் அவதிப்படும் எல்லா இடங்களில் உள்ள ராணுவ வீரர்கள் அனைவருக்கும் இது போல் நிகழ்ச்சிகளை செயற்படுத்த வேண்டும்."
- திரு கொம்ளிகோவ், ராணுவ தலைவர், ரஷ்யா
"மூச்சினால் இவ்வளவு அமைதி கிடைக்கும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இப்பொழுது அவ்வளவு அமைதியாக இருக்கிறேன். அதுவும் வெறும் என் மூச்சை உபயோக படுத்தி!"
- இளைஞர், லொஸ் அன்கேலேஸ் இளைஞர் மையம்
""ப்ரிசன் ஸ்மார்ட்" நிகழ்ச்சி கைதிகளில் பிரசித்தமான மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் சாரம் கடும் குற்றவாளிகளை கூட மனம் நெகிழவைத்திருக்கிறது. கசப்பாகவும் ஒப்பனமாகவும் இருக்கும் ஒரு கைதியின் வாழ்கையில், வாழும் கலை நிறுவனம் அவர்களின் ஆவேசங்களை வெளிப்படுத்தவும் மனதை சுற்றம் செய்யவும் ஒரு வாய்ப்பை தந்திருக்கிறது."
- அசோக் சௌதரி, மாநில அமைச்சர், சிறை துறை, பீகார்.
"வாழும் கலை நிகழ்ச்சிகளால் எனாகு எவ்வளவு திருப்தி என்று சொல்ல வந்தால், நான் இந்த நிகழ்ச்சி உலகில் இருக்கும் ஒவ்வொரு சிறையிலும், போலீஸ் அதிகாரிகளுக்கும், பள்ளிகளிலும், எல்ல இடங்களிலும் நடத்த வேண்டும் என்று உறுதியாக சொல்வேன்."
- கிரண் பேடி, முன்னாள் இன்ஸ்பெக்டர் திகார் சிறை, முன்னாள் போலீஸ் இணை ஆணையாளர்.
"ஒரு இரும்புக் கம்பியை நடுவில் சுட வித்தால் அது அந்த இடத்தில் வளையும். அதே போல் தான் என் வாழ்கை வாழும் கலை பயிற்ச்சியினால் மாறி இருக்கிறது. 1990ல் நான் சிகரட் புடிப்பேன். 2000 ஆண்டில் மேலும் கேட்ட பழக்கங்களுக்கு ஆளானேன். ஆனால் இப்பொழுது முழுமையாக மாறி இருக்கிறேன். அன்பால்தான் உலகை வெல்ல முடியும் என்று இப்பொழுது எனக்கு புரிகிறது."
- முன்னாள் தீவிரவாதி, உதம்பூர் சிறை, ஜம்மு & காஷ்மீர், இந்தியா.
"சிறையில் இருக்கும் அவமானத்தை தாங்க முடியாமல் தினமும் செத்தால் நல்லது என்ற என்னங்குலடன் வாழ்ந்து கொண்டிருந்தேன். தூக்கம் இல்லை. தூக்க மாத்திரை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சுதர்ஷன் க்ரியா செய்த பிறகு முதல் முறையாக பழைய என்னங்களிளுருந்து விடுமுறை கிடைத்தது. கடுமைத்தனம் கரைந்தது. எவ்வளவு இலேசாக இருக்கிறது என்பதை என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. என்னால் பேச முடிகிறது, உள்ளே ஒரு வகையான சுதந்திரத்தை அனுபவிக்கிறேன்."
- நிலூபர், பைகுல்லா சிறை , மும்பை இந்தியா.
"இதற்ற்கு முன்னால் நான் செய்தது எல்லாம் தவறுதான். ஆனால் இனி எந்த வகையிலும் சட்டத்தை மீரா மாட்டேன் என்று சபதம் எடுத்துள்ளேன்."
- பியூர் சிறை, பீகார், இந்தியா.