கூட்டு நிறுவன கலாச்சாரம்

வியாபாரத்தின் மூச்சு நம்பிக்கை, அதன் அங்கம் ஒழுக்கம், அதன் சக்தியை உயர்த்துவது அதன் இலட்சியம்;
- ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

 

1.jpg

"மனித நேய சர்வ தேச அமைப்பின் முயற்சியே "கூட்டு நிறுவன கலாச்சாரமும், ஆன்மீகமும்". இந்த மையக் கருத்துக்கள் வேறுபட்டாலும், இந்த தலைசிறந்த ஆண்டு கருத்தரங்கு, வியாபாரத்திற்கும், ஆன்மீகத் தலைவர்களுக்கும், அவர்கள் சமூக பொறுப்புகள், வியாபார நெறிமுறைகள், மற்றும் தொடர்ச்சியான லாபகரமான தலைமை தாங்கி நடத்துவதற்கான திறமைகள் இவற்றை பகிர்ந்துகொள்வதற்கான உள்ளுணர்வுகளையும், அனுபவங்களையும் கொடுக்கும் மேடையாகும்.

 

இந்த மையம் 2003 ல் பெங்களூர், இநதியாவில் தொடங்கப்பட்டது. உலகின் மறுபகுதியிலிருந்து வணிகத் தலைவர்களும், கலைக் கழக உறுப்பினர்களும்,ஆன்மீகத் தலைவர்களும், இதில் கலந்து கொண்டனர்.அதன் வெற்றியினால் தூண்டப்பட்டு, வாழும் கலை அமைப்பின் தலைமையகமான பெங்களூரில் இரண்டாவது மாநாடு 2004ல் கூட்டப்பட்டது. 2006 ல் , பிரசல்ஸ் நாட்டில் உள்ள ஐரோப்பியன் பார்லிமேண்டில் மாநாடு நடந்தபோது, 20 நாடுகளிலிருந்து 300 க்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டு, நெறிமுறைகளும் வணிகமும் எப்படி புதுமையான மற்றும் தொடர்ச்சியான அபிவிருத்திக்கு ஒரு மிக முக்கியமான அங்கம் என்பதை பற்றி பேச்சு வார்த்தை நடத்தினர்.

 

2007 ல் பிரசல்சில் திரும்பவும் இந்த மாநாடு நடைபெற்றது. முக்கிய தலைவர்களான றுத் லுப்பெர்ஸ் (நெதர்லாண்ட்ஸ் நாட்டின் முன்னாள் பிரதம மந்த்ரி மற்றும் "எர்த் சார்ட்டர்" நிறுவத்தின் இணை தாபகர்.); டாக்டர் ஜாக்ஸ் சண்டெர், லுசேம்புர்க் நாட்டின் முன்னாள் பிரதம மந்திரி மற்றும் ஐரோப்பிய கமிஷனின் முன்னாள் ஜனாதிபதி; திரு நீல்ஸ் கிறிஸ்டியன்சென், நெஸ்லேயின் துணை ஜனாதிபதி; திரு. ருத்கேர் கூப்மான்ஸ், ஐ.என்.ஜி வங்கியின் பொது முகாமையாளர்; திரு வேணுகோபால் தூத், வீடியோகாண் நிறுவனத்தின் அக்கிராசனர் ; டாக்டர் ஹன்ன்ஸ் க்லாட்ஸ், டைம்ளீர் நிறவனத்தின் பேராளர்; மற்றும் பேராசிரியர் பீட்டர் எயகேன், தாபகர்,"ட்ரான்ஸ்பாரேன்சீ இன்டர்நேஷனல் ,ஜெர்மனி" ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

 

Testimonials
"என் கருத்தில் இப்பொழுது மிக அவசியமான தேவை ஆன்மீக உணர்வும் தன்னிலை அறிதலின் விஸ்தரிப்பும் தான். இதனால் கொழப்பமுள்ள இந்த சமுதாயத்தில் நெறிமுறை வளரும்."
- டாக்டர் மைரன் ஷோலஸ், 1997 நோபெல் பரிசாளர்.

"கூட்டு பொருளாதார அக்கறை, ஊழியர் மேல் மற்றும் சமுதாயத்தின் மேல் அக்கறை, இதுவே கூட்டு நிறுவன ஆட்சியாகும்."
- திரு. மோகன்தாஸ் பாய், மனித வளம் பணிப்பாளர், இன்போசிஸ்.