எழுத்தறிவை முன்னேற்றுதல்
கல்வியை அடிப்படையாகக் கொண்ட ஸ்ரீ ஸ்ரீ யின் முயற்சிகள் மத்தியதர சமூகத்தின் குழந்தைகளை நோக்கி இருக்கிறது. இல்லையென்றால், அவர்கள் குழந்தை தொழிலாளர்களாக ஆகி இருப்பார்கள். இந்த முயச்சியினால் 204 இலவச பள்ளிகள் இந்தியாவின் பழங்குடி இனம் மற்றும் கிராமப்புறத்தை சேர்ந்த இடங்களில் கட்டப்பட்டன. இதனால் 23500 குழந்தைகள் பலனடைந்தனர். பெரும்பாலும், இந்தப் பள்ளியிலுள்ள மாணவர்களில் 95 % அவர்களுடைய குடும்பத்தில் முதல் பரம்பரையை சேர்ந்த படித்தவர்கள் ஆவார்கள்.
இதுவரை இல்லாத நல்ல வாய்ப்புகளை நிகழ்காலத்தில் உருவாக்குதல்
அக்டோபர் 2007 ல், வாழும் கலை அமைப்பு உநிசெபுடன்(UNICEF) சேர்ந்து குழந்தை உரிமைகலை மேம்படுத்த கூட்டுத் தீர்மானம் ஒன்றை வெளிப்படுத்தியது. சலுகைகள், குறைந்த குழந்தைகளுக்காக தரமான கல்வி கிடைக்கச் செய்வதோடு, இந்த அமைப்பு, உடல் நல பாதுகாப்பும் கிடைக்கச் செய்கிறது. மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும், தவறாமல் மருத்துவ சோதனைகளுக்கும், மனவுளைச்சளிலிருந்து விடுபட உதவும் பயிலரங்குகளுக்கும் ஆஜராகினர். அவர்களுக்கு இலவச சீருடைகளும், எழுது பொருள்களும், மற்றும் மதிய உணவும் கொடுத்தனர்.
அந்த மாதிரியான ஒரு கிராமப் பள்ளி பெங்களூருல் இந்த அமைப்பின் சர்வதேச மையத்தில் அமைந்துள்ளது. 30 மாணவர்களுடன் 1981 ல் ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளி , சுற்றிலுமுள்ள 45 கிராமங்களிலிருந்து 2400 குழந்தைகளுக்கு தரம் வாய்ந்த கல்வியையும் கொடுக்கிறது.
- நிரந்ஜன் பாலகிருஷ்ணன், நாகப்பட்டினம், இந்தியா
"என் குழந்தை பள்ளிக்கு செல்லும் முன் யாருடனும் சேர்ந்து விளையாட மாட்டான். ஆனால் இப்பொழுது மட்டற்ற குழந்தைகள் போல் ஓடி ஆடி விளையாடுகிறான். பள்ளியில் கற்றுக்கொண்ட "ஆர்ட் எக்ஸ்செல்" பயிற்ச்சியினால் அவனுக்கு இப்பொழுது தன நம்பிக்கை கூடியுள்ளது. அவனுக்கு பள்ளிக்கு செல்ல அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. ஞாயிற்றுக் கிழமை கூட பள்ளிக்கு செல்ல விரும்பிகிறான்!"