எல்லாவற்றையும் உள்ளிட்ட அபிவிருத்தி

 

5H (உடல்நலம், சுகாதாரம்,வீடு, மனிதநேயம்,வேற்றுமையில் ஒற்றுமை) நிகழ்ச்சி சேவை மற்றும் ஆன்மீகத்தின் மூலம் உலகில் மிகப் பெரிய வித்தியாசத்தை செய்து கொண்டிருக்கிறது. தனி நபரையும்,சமுதாயத்தையும் உயர்த்தி, அவர்களை சமுதாயம் மற்றும் பொருளாதார தன்னம்பிக்கையோடு இருக்க உதவி செய்வதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

 

1997 ல் இதன் தொடக்கத்திலிருந்து 5H ன் இலட்சியம்,ஏழ்மை, அவலநிலை, நோய், இவற்றை வேரோடு அழித்து, சமூகத்தினரிடையே அமைதி, ஒற்றுமைக்கு உத்தரவாதமளித்து, சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதே ஆகும். இந்தியாவில் 34422 கிராமங்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் பயனடைந்திருக்கின்றன. இந்த நிகழ்ச்சி தென் ஆப்ரிக்கா, கமேரூன், பிரேசில், அமெரிக்கா, கென்யா ஆகிய இடங்களில் உள்ள நகர்ப்புற சேரிகளிலும், கிராமங்களிலும் செயல்படுத்தப்பட்டது.

 

5H ன் வேலைகள்:

ஏழ்மையான நிலையிலிருப்போரின் தரத்தை உயர்த்துதல்.

மனரீதியாக, உடல்ரீதியாக, உணர்வுரீதியாக, ஆன்மீகரீதியாக மக்களை உயர்த்துதல்.

சமூக மாற்றத்தில் முன்னேற்றமடைய அடிப்படைகளை வடிவம் உருவாக்குதல்.

வியாதியற்ற உடல், அழுத்தமற்ற மனம், இவற்றை அடைய ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு சந்தர்ப்பம் அளித்தல்.

மனித நேயத்தை தொடர்ந்து வலியுறுத்தலும், வேற்றுமையில் ஒற்றுமையை வளர்த்தலும்.

 

வீடுகள்
வீடுகள், பள்ளிகள், பல்நோக்கு சமூக மையங்கள் முதலிய அடிப்படை தேவைகளை பெற 5H உதவுகிறது.

உடல்நலம்
நல்ல சுகாதாரத்தையும், உடல்நல பயிற்சிகளையும், ஆரோக்கியமாக உண்ணும் பழக்கத்தையும் பற்றி மக்களுக்கு, முக்கியமாக குழந்தைகளுக்கும், குழந்தையை எதிர்பார்த்திருக்கும் தாய்மார்களுக்கும், கற்பித்தல்.

சுகாதாரம்
போதுமான சுகாதார பழக்கங்கள், சுத்தமான குடிநீர் இல்லாத இடங்களில் நல்ல உடல்நலத்தை அடையச் செய்து, பாதுகாப்பது.

மனிதநேயம்
5H நிகழ்ச்சியின் அதிகமான, மற்றும் இதற்குமுன் நிகழ்ந்திராத வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் காரணம் மனித மதிப்புகளை அதாவது, நட்புணர்வு, பராமரிப்பு, மரியாதை மேலும் நம்பிக்கை இவற்றிற்கு உயிர் ஊட்டுவதினாலேயே என்று உறுதியாக ஏற்றிக் கூறலாம்.

வேற்றுமையில் ஒற்றுமை
இயற்கையில் இருக்கும் வேற்றுமையை மதிக்கவேண்டும் என்பதை உண்டாக்கும். கல்வியாலும், உலகத்தில் எல்லோருடனும் சேர்ந்து வாழும் திறத்தாலும் 5H நிகழ்ச்சியின் வேற்றுமையில் ஒற்றுமை பகுதி எல்லா மதத்திலும் உள்ள பொது தார்மீக மற்றும் ஆன்மீக விழுமங்களை பங்குகொள்ள ஒரு மேடையை உருவாக்கியிருக்கிறது.

இந்தியாவில் ஒருங்கிணைந்த சமூக முன்னேற்றம்

34422 கிராமங்களில் 5H நிகழ்ச்சி அமல்படுத்தப்பட்டது.

61460 இளைஞர் தலைவர்களுக்கு அளித்த பயிற்சியினால் புதிய திருப்பம் கொடுத்தல்

121589 பயிற்சி முகாம்களை நடத்தி, மன அழுத்தத்திலிருந்து விடுபட்ட மக்களை உருவாக்குதல்

59814 சமூக கூட்டங்களின் மூலம் மக்களுக்குள் நல்ல இணக்கத்தை வளர்த்தல்

23618 மருத்துவ முகாம்கள், 87 ஆரம்ப உடல் நல மையங்களின் மூலம் இன்னும் உடல் நலத்தை நன்கு முன்னேற்றுதல்

1527 வீடுகளை அளித்து நிலையான வாழ்வை கொடுத்தல்

1036 குழாய் கிணறுகள் மூலம் நீர் வழங்க ஏற்பாடு செய்தல்

2251091 மரங்களை நட்டு, வளமான சூழ்நிலையை உருவாக்குதல்

2915 சுய உதவி குழுக்கள் மூலம் வேலை வாய்ப்புக்கான முன்னேற்றம் கொடுத்தல்.

48869 சுத்தம் செய்யும் முகாம்கள்,5670 கழிவறைகள், 528 புதிய வடிகால்கள் கட்டி, சுத்தமான சமுதாயத்தை மேம்படுத்துதல்