Sri Sri Mobile Agricultural Institute
2003 இல் துவங்கப்பட்ட ஸ்ரீ ஸ்ரீ நடமாடும் விவசாய கழகத்தின் முக்கிய நோக்கம், விவசாயிகளின் தன்னம்பிக்கையை மேம்படுத்தி, ஆர்கானிக் உழவும் முறையை உயிர்ப்பித்து, நீர் பாசனம் மற்றும் திறமையாக நீர் உபயோகம் போன்றவற்றை கற்பிப்பதே ஆகும். இரசாயனம இல்லாத விவசாய முறைபற்றி விழிப்புணர்வு குறித்த பயிற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மற்றும் ஆர்கானிக் உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகளின் நன்மைகள் பற்றிய அறிவு முதலானவை கழகத்தின் முக்கிய திட்டங்கள் ஆகும். இந்த கழகம் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு பதிலாக உள்நாட்டு விதைகளை பயன்படுத்த வலியுறுத்தி உள்ளது, மற்றும் கூட்டுறவு விதை சேமிப்பு கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.