Sri Sri Rural Development Trust

ஸ்ரீ ஸ்ரீ கிராம மேம்பாட்டு அறக்கட்டளை இந்திய கிராமப்புற மக்கள், நிரந்தர மற்றும் மாறு பட்ட வருமானம் பெற வழி வகுக்க 2001 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த அறக்கட்டளை வாழும் கலை அமைப்புடன் இணைந்து கிராமப்புற பெண்கள் அறிவை மேம்படுத்தி, பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி திட்டங்கள், சுய மேம்பாட்டு பயிற்சி, இலவச மருத்துவ முகாம்கள், மற்றும் இளைஞர் தலைமைத்துவ பயிற்சி ஆகியவற்றை செயல்படுத்துகிறது.

 

இளைஞர் தலைமைத்துவ பயிற்சி

  • 110,000 இளைஞர்களுக்கு பயிற்சி
  • இந்தியாவில் 40212 கிராமங்களை அணுகியிருக்கிறது
  • 55 எடுத்துக்காட்டான கிராமங்கள்(நடந்து கொண்டிருக்கிறது)
  • 23 லக்ஷத்திர்க்கும் மேலான மரங்களை நடுதல்
  • 2138 வீடுகள், 7819 கழிவறைகள், 1152 "போர்"-கிணறுகள், 904 உயிர் எரிபொருள் தொழிற்ச்சாலைகள் கட்டப்பட்டுள்ளன
  • 49500 சுகாதாரம் வளர்க்கும் நிகழ்ச்சிகள், 25950 மருத்துவ நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இவை 28 லக்ஸ மக்களுக்கு பயன் அளித்திருக்கின்றன.