The God within
உன்னுள் இருக்கும் கடவுள்
கடவுள் எப்பொழுதும் தனித்திருக்கும் பொருளல்ல. உனக்குள்ளேயே இருப்பவர். ஆத்மாவிர்க்கும் கடவுளுக்கும் உள்ள வேற்றுமை கடலலைக்கும் கடலுக்கும் உள்ளதுதான். கடல் இல்லாமல் அலைகள் இருக்க முடியுமா?
நீ யார்? உன்னை பற்றி உனக்கு தெரியுமா? முதலில் உன்னை பற்றி தெரிந்துகொள். நீ உன்னை உடலாக மட்டும் நினைக்க முடியாது. ஏனென்றால் உடலுக்கு எல்லைகள் உண்டு. உன்னை மனமாக மட்டும் நினைக்க முடியாது. ஏனென்றால் மனதிர்க்கும் கூட எல்லைகள் உண்டு. அது உன் இருப்பின் மற்றொறு அடுக்காகும். நீயே மௌனம். நீயே வெற்றிடம் என்று அறிந்தால் கடவுளும் வெற்றிடமாக இருக்கலாம். எப்படி உன் உடல் ப்ரோடீன், அமினோ ஆசிட், கார்பொஹ்ய்டிரேட் இவற்றால் ஆகியுள்ளதொ, அப்படியே உன் மனமும் ஆத்மாவும் அன்பால் ஆகியுள்ளாது. நீ அன்பாய் ஆகியுள்ளாய். எல்லோரும் அன்பே. கடவுளும் அன்பே. ஆதலால் நீ கடவுளால் ஆகியுள்ளாய். உன் உடலின் ஒவ்வொரு சிறு அணுவும் அன்பால் ஆகியுள்ளது. அதுதான் கடவுள். கடவுள் எங்கோ சொர்கத்தில் இறுப்பதாக நினைக்காதே. கடவுள் இங்கேயே இப்பொழுதே இருக்கிறார்.
கடவுள் வெள்ளை தாடி வெய்த்து சொர்கத்தில் இருப்பவர் அல்ல. அன்பே கடவுள். விண்வெளியும் அவரே. நீ த்யானம் செய்யும் பொழுது அமைதியாக உணரும் பொழுது வீட்டில் எல்லொருடனும் இறுக்கும் பொழுது நீ தெய்வீக சக்தியுடன் தொடர்புள்ளவராக இருக்கிறாய். அன்பில்லாமல் நீ வாழ முடியுமா. உபனிஷத்தில் சொல்லி இருக்கிறது – “கம் கம் ப்ரஹ்மமா”. அதாவது எதில் எல்லாமும் இருக்கிறதோ, எதில் எல்லாமும் கரைந்து போகிறதோ அதுவே கடவுள். எது கடவுள் இல்லை? கடவுள் என்பதர்க்கு விளக்கம் இருந்தால் அது என்னவாக இருக்கும்? எல்லா இடங்களிலும் இருப்பவர், சர்வ வல்லமை படைத்தவர், படைப்புக்கு பொறுப்பேற்றவர், பாதுகாப்பவர், அழிப்பவர் என்பதாக சித்தரிப்பாய். நீ “நான் கடவுளைப்பார்க்க வேண்டும்” என்பாய். கடவுளை நீ ஏதோ ஒன்றாக, ஒரு பொருளாக பார்க்க நினைத்தால் அப்பொழுது அது எல்லா இடத்திலும் இல்லாத ஒன்று. அப்பொழுது நீ கடவவுளல்ல. தன்னிலிருந்து பிரத்து கடவுளளை பார்க்க விரும்பினால் அது ஒரு மாயை. கடவுள் புலன்களால் அரியக்கூடிய பொருளல்ல. ஆனால் உணர்வுகளின் உணர்வு, இருப்பின் இருப்பு, மௌனத்தின் ஒலி, வாழ்வின் ஒளி, உலகின் சாராம்சம், பேரின்பத்தின் ருசி.
எப்படி இதயத்தில் அன்பை உணருகிறோமோ அதேபோல் கடவுளையும் உணர முடியும். அவர் தனித்திருப்பவரல்ல. ஆவர் முழுமையானவர். “நான்” என்பது மறைந்தால் மீதம் இருப்பது கடவுள். “நான்” என்பது இருக்கும் பொழுது அங்கே கடவுள் இல்லை. “நீயோ” அல்லது கடவுளோதான் இருக்க முடியும். இரண்டும் அல்ல. நீ தியானம் செய்யும் பொழுது கடவுளோடு ஒன்றி விடுகிறாய். நீயே கடவுள். அதனால்தான் “தத்வமசி” அதாவது “நீதான் அது” என்று சொல்லப்படுகிறது.
உன் இதயத்தின் ஆழத்தில் கடவுளை உணர வேண்டும். கடவுளை புலன்களாலோ மனதாலோ உணர முடியாது. உணருபவரே கடவுள்தான். வெற்றிடமே கடவுள். வெற்றிடம் எல்லா இடத்திலும் உள்ளது. எல்லாமே வெற்றிடத்தில் உள்ளது. வெற்றிடத்தை எதுவும் தொட முடியாது, வெற்றிடத்தை எதுவும் அழிக்க முடியாது. வெற்றிடத்தை நீ தனியான ஒரு பொருளாய் பிரித்துப்பார்க்க முடியாது.
மூன்று விதமான வெற்றிடங்கள் உள்ளன:
“பூத ஆகாஷ்” – பரவெளி – எங்கே இந்த பிரபஞ்சம் முழுவதும் இருக்கிறதோ.
“சித்த ஆகாஷ்” – சிந்தனை, கனவு மற்றும் மனப்பதிவுகளின் உலகம்
“சித ஆகாஷ்” – எல்லாவற்றையும் ஊடுரவி செல்லும் உணர்வு. படைப்பின் அடிப்படை. அதுவே கடவுள். எல்லாவற்றையும் அறியும் ஒன்று.
கடவுளை நீ காணும் பொருளாய் ஆக்க முடியாது. அப்படி நீ நினைத்தால் அது கடவுளல்ல. நீ கடவுளாக வாழலாம், கடவுளாக இருக்கலாம் ஆனால் கடவுளை உனக்கு பாதயைத்தரும் பொருளாக நினைக்க கூடாது.
படைப்பிற்க்கென்று தனியே மனம் இருக்கிறது. உன்னைப்போலவே. உனக்கு புத்திசாலியான மனம் இருப்பதால் அது எல்லாவற்றையும் ஒழுங்காக வைத்து இருக்கிறது. அது போலவே, இந்த கணம் பெரிய மனதால் பார்க்கப்படுகிறது. இந்த கணத்திற்க்கு எதைச்செரியாக செய்ய வேண்டும் என்று தெரியும். இந்த படைப்பில் நிரைய செயல்கள் நிகழ்கின்றன. இப்பொழுது சிலர் தூங்குகின்றனர், சிலர் விழித்திருக்கின்றனர. உலகம் முழுவதிலும் ஏதொ ஒன்று நடந்து கொண்டிருக்கிரது. இப்பொழுது மனதில் பலதரப்பட்ட செய்ல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நிகழ் காலத்தில். இப்பொழுது! இந்த மனதை ஆத்மா அல்லது கடவுள் என்று அழைக்கலாம். அதுவே நீ.
ஆத்மாவை கடந்ததே கடவுள். முதலில் ஒருவர் ஆத்மாவையேனும் அடைய வேண்டும். ஆத்மாவுக்கும் கடவுளுக்கும் உள்ள வித்யாசம் அலைக்கும் கடலுக்கும் உள்ளதே. கடல் இல்லாமல் அலை இருக்க முடியுமா? கடவுள் என்பவர் ஆக்குபவர், காப்பவர், அழிப்பவர் (பிரம்மா, விஷ்ணு, மஹேஷ்வரன்). இந்தக்கணமே உற்பத்தியாக்கி, இந்தக்கணமே இயக்கி, இந்தக்கணமே கடந்த காலத்தை அழிக்கிறது. ஆகவே நீ கடவுளுக்குள் இருக்கிராய்.கடவுள் உன்னுள் இருக்கிறார். கடவுளின் இதயத்தில் எல்லோருக்கும் ஒரு இடம் இருக்கிறது.
மனம் பறவயமான திட்டவட்டமானவற்றையும் உருதியானவற்றையும் பார்த்து பழக்கப்பட்டது. எனவே மனதால் நுண்மமான ஒன்றைப் பாராட்ட முடியாது . மனம் உறுதி மொழிகளை வேண்டுகிறது. நீ ஒருவரை விரும்பினால் அவர் உன்னை உண்மையில் விரும்புவதாக உறுதி மொழி கேட்கிறாய். அதனால்தான் ஜீஸஸ் சொலகிரார்: “நான் ஒரு பகுதியாகத்தான் வெளிபட்டுள்ளேண். அதனால் நான் உன்னிடம் சொல்வதை அறிவாய். நீ என்னைப்பற்றி சிரிதே அறிவாய். என்னைப்பற்றி அதிகமான அளவு உனக்கு தெரியாது."
நீ வீட்டுக்குள்ளேயே இருந்தால் கதவுக்கு அவ்வளவு மதிப்பு கொடுக்க மாட்டாய். நீ முதலிலேயே வீட்டுக்குள்ளோ அல்லது அறையிலோ இருந்தால் கதவை மூடவோ திறக்கவோ தேவையில்லை. நீ அறையினுள் இல்லாவினில் கதவை திறக்க வேண்டும். ஜீஸஸ் சொன்னார் – “நீ சூரியனால் – வெப்பத்தால் வேண்டுமளவு எரிந்து விட்டாய். எல்லா இடங்களிலும் அலைந்து திரிந்து விட்டாய். உள்ளே வா”. இந்த அறை உனக்காக தயாராக இருக்கிறது. இந்த நம்பிக்கையைத்தான் ஒரு குரு உனக்கு அளிக்கிறார். நீ அறியாததை நீ நம்பமாட்டாய். நீ கடவுலை நம்ப மாட்டேன் என்பாய். கடவுள் உன்னுள்ளேயே இருக்கிறார். வெங்காயத்தை போல நீ ஒரு ஒரு அடுக்காக பிரித்து நடு பாகத்தை அடையும் பொழுது எதுவுமே இருக்காது. எல்லாமே வெற்றிடம்தான். முழுமையே கடவுள். எல்லாமே கடவுள். அந்த உணர்வு எல்லா இடங்களிலும் இருக்கிறது. நான் இங்கும் இருக்கிறேண், அங்கும் இருக்கிறேண், எங்கும் இருக்கிறேன். அந்த இருத்தல், அந்த வெற்றிடம் அந்த உணர்வையே மக்கள் கடவுள் என்று அழைக்கிரார்கள் ஏனென்றால் அது எல்லா இடங்களிலும் எப்பொழுதும் உள்ளது. அந்த சர்வ வல்லமை படைத்த எல்லா இடங்களிலும் இருக்கும் சக்திக்கு பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
நீ இதை இந்த மாதிரியும் பார்க்கலாம். உடலில் பல உயிர் அணுக்கள் உள்ளன. ஒவ்வொண்ருக்கும் உயிர் உள்ளது. புது உயிரணுக்கள் வந்து பழைய உய்ரியணுக்கள் இறந்து விடுகின்றன ஆனால் அவற்றுக்கு உன்னைப் பற்றி தெரியாது. இருந்தாலும் இந்த உயிரணுக்கள் உன்னால் பாதிக்க படுகின்றன. ஒரு சிரிய உயிரணுவால் நீ பாதிக்க படுகிறாய். அதே போல் “உயரிய” வாழ்க்கையும் “உயரிய” மனமும் எவை நம் வாழ்க்கையையும் மனதையும் சுற்றி இருக்கிறதோ அதயே நாம் கடவுள் என்று சொல்கிறோம். இதற்க்கு அர்த்தத்தை காண்பது உபயொகமற்றதாகும். ஒரு பூ பூக்கிரது. அழகின் நோக்கம் என்ன? மகிழ்ச்சி அடைவதர்க்காக என்று நீ சொல்லலாம். மகிழ்ச்சியின் நோக்கம் என்ன. மகிழ்ச்சிக்கு நோக்கம் கிடயாது. அதுவேதான் முடிவு.
வாழ்க்கையை முழுமயாக வாழும் பொழுது அதுவே ஆதியும் அந்தமுமாக ஆகிறது. அன்பு, மகிழ்ச்சி, அழகு இவை யாவும் விலை மதிப்பற்றது. இவையெல்லாம் உண்மையிலேயே விலை மதிப்பு, அர்த்தம், காரணம் இவைகளுக்கு அப்பாற்பற்றவையாகும்.