Youth Programs
வாழும் கலை தர்ம ஸ்தாபனம், மனிதர்களை உக்குவித்து, உற்சாகபடுத்தி, தேவையான தன்னம்பிக்கையை அளித்து அவர்கள் தன் வாழ்கையை முழுமையாக அனுபவித்து சந்தோஷமாக வாழ வகை செய்ய தன்னை அர்ப்பணித்து இருக்கிறது. அஹிம்சை, அன்பு, இயற்கையின் பால் பரிவு, நன்கு வாழ துடித்தல், மற்றவர்கள் மேல் சஹோதர நோக்கு , சேவை மனப்பான்மை போன்ற எல்லா மதங்கள், கலாச்சாரங்கள், மனித நேய அமைப்புகளுக்கு பொதுவான நற்பண்புகளை இளைஞ்சர்களுக்கான வகுப்புகள் முக்கியத்துவம் அளித்து போதிக்கின்றன.
ஆர்ட் எக்ஸ்செல் ( எட்டு முதல் பதிமூன்று வயது வரை)
எல்லா மத, கலாசார, இன பாகு பாடுகளை சார்ந்த இளம் வயதினரை கவரும் வகையில் எளிதான, விளையாட்டு அம்சங்கள் நிறைந்ததாக அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த வகுப்புகள் இளம் வயதினரின் முழு திறனையும் வெளிகொணர்ந்து, உன்னதமான மனித நேய பண்புகளை கற்பித்து, அவர்கள் வாழ்கையை செம்மை படுத்துகிறது.
எஸ் (பதினாலு முதல் பதினெட்டு வயது வரை)
போட்டியும் விளையாட்டும் நிறைந்த பதினெட்டு மணி நேரமான இந்த பயிற்சி மாணவர்களை தங்களது உணர்சிகளையும் மன அழுத்தங்களையும் கட்டுபடுத்தும் திறவுகோலாக அமைவதுடன் வளரும் இளம் பருவத்தின் தேடல்களை ஒழுங்கு படுத்தும் ஆசானாகவும் விளங்குகிறது.
எஸ் பிளஸ் ( பதினெட்டு முதல் இருபத்து ஏழு வரை)
சுறுசுறுப்பான, புதிய நோக்குடன் அமைந்த இந்த பயிற்சியினால் பங்கு பெறுவோர் கல்வி, உலக அறிவு இவற்றில் அதிக விருப்பம் கொண்டு தங்களது வாழ்கையை எளிதாகவும், புத்துணர்ச்சியுடனும், எந்த பிரச்சனையானாலும் தடுமாற்றம் இல்லாமலும் எதிர்கொள்ள முடிகிறது.