Special Programs
வாழும் கலை தர்ம ஸ்தாபனம் மனிதர்களை உற்சாகபடுத்தி, ஊக்குவித்து , சுய நம்பிக்கையை வளர்த்து தன் வாழ்கையை முழுமையாக வாழ வழி செய்கிறது. அஹிம்சை, அன்பு, இயற்கையின் பால் பரிவு, நன்கு வாழ துடித்தல், மற்றவர்கள் மேல் சஹோதர நோக்கு , சேவை மனப்பான்மை போன்ற எல்லா மதங்கள், கலாச்சாரங்கள், மனித நேய அமைப்புகளுக்கு பொதுவான நற்பண்புகளை ஸ்பெஷல் ப்ரோக்ராம் வகுப்புகள் முக்கியத்துவம் அளித்து போதிக்கின்றன.
அபெக்ஸ் ப்ரோக்ராம்
இது பெரிய அலுவலகங்களில் மன அழுத்தம் குறைத்து அதிக பயனுள்ள வேலை முறை அளிக்கும் ப்ரோக்ராம்.
கிரிமினல் ஜஸ்டிஸ் சிஸ்டம் ப்ரோக்ராம்
அனைத்து கிரிமினல் ஜஸ்டிஸ் குழு, சிறையில் இருக்கும் மனிதர்கள், சிறுவர்கள், அவர்களது குடும்பங்கள், பழைய கைதிகள், கொலை, கொள்ளை, இம்சைக்கு ஆட்பட்டவர்கள், அலுவர்கள், அதிகாரிகள் - இவர்கள் எல்லோருக்கும் ஏற்ற ஸ்மார்ட் ப்ரோக்ராம்.
எய்ட்ஸ் ப்ரோக்ராம்
இதற்காகவே அமைக்கப்பட்ட மூச்சு பயிற்சி யோகா ப்ரோக்ராம், எய்ட்ஸினால் அவதி படும் மனிதர்களின் மனதை அமைதி அடைய செய்து மன அழுத்தத்தை நீக்கி, அவர்களுக்கு உணர்வாலும் மனதாலும் நம்பிக்கை ஊட்டி அதிக நன்மை பயக்குகிறது.