ஆன்மீக மறுமலர்ச்சியால் சமுதாயத்தை சீர்திருத்த முடியும்

ஆன்மீக மறுமலர்ச்சியால் சமுதாயத்தை சீர்திருத்த முடியும்
Time: 
12/10/2011

 

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் ஆன்மீகத்தின் மறுமலர்ச்சிக்கு ஒரு மிக பெரிய உதாரணம். இந்த அமைப்பை  பின்பற்றி இந்தியாவிலும் சரி, உலக அளவிலும் சரி கோடிகணக்கானவர்கள் உள்ளனர்.

ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் லஞ்சம், ஆன்மீக மறுமலர்ச்சி மற்றும் பல விஷயங்களை பற்றி, ஜீ செய்திகள்.காமை சார்ந்த,சுவாதி சதுர்வேதி அவர்களுடன் கஹிய ஜனாப் என்னும் உரையாடல் நிகழ்ச்சிக்கான தனிப்பட்ட பேட்டி வருமாறு.

சுவாதி: நீங்கள் நிறைய முரண்பாடான தீர்மானங்களில் ஈடுபட்டவர், இலங்கையிலும் ஒரு முரண்பாடான தீர்மானத்தில் பங்கு வகித்தீர்கள், அது போல் இந்தியாவிலும் ஏன் செயலாற்ற முடியவில்லை? இங்கு எங்கும் லஞ்சம் பரவி கிடக்கிறது. அரசியல் பிரிவுகளும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது?

ஸ்ரீ ஸ்ரீ: நாங்களும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறோம், ராஜஸ்தான் சென்ற போது, அங்குள்ள குஜ்ஜர் இயக்கத்தின் செயல்பாடுகளை குறித்தும், மாவ்யஸ்ட் பகுதிகளில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் வழிகளை பற்றியும், எங்கு பிரச்சனை ஏற்பட்டாலும், நாங்கள் அதை சுமுகமாக தீர்க்கவே  ஆசைப்படுகிறோம்.          

சுவாதி: அரசியல் நிறமாலையில் ஏற்படும் முரண்பாடுகளை பற்றி உங்களது அபிப்பிராயம்?  

ஸ்ரீ ஸ்ரீ: நிஜமான முரண்பாடுகளை தீர்க்க வழிகளை தேடலாம் ஆனால் பொய்யான முரண்பாடுகளை எப்படி தீர்ப்பது?  அவை நிஜமாக இருந்தால் தானே தீர்பதற்கு!!!

 

சுவாதி: நாம் நிஜமான பிரச்சனைகள் விட்டுவிட்டு உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகளையும்,வீண் அவதூர்களில் கவனத்தை செலுத்துகிறோமா?

ஸ்ரீ ஸ்ரீ: நான் என்ன நினைகிறேனா, இப்ப இருக்கிற அரசியல் தேவையோ அல்லது சமுதாய தேவையோ எல்லாமே ஒரு வியாபார நோக்கத்தோட தான் செயல்படுது. நாம் தனிமனித சந்தோஷத்தை மட்டுமே எதிர்பார்க்கும் சமுதாயமாக மாறிவிட்டோம். சமுதாய தேவைகளை பற்றி நமக்கு அக்கறை இல்லாமல் போய்விட்டது. இன்று தனிமனித வெற்றி தான் முக்கியமாக கருதபடுகிறது. நான், எனது கட்சி, கடைசியாக தான் எனது நாடு என்கிற நிலைமையில் இருக்கிறோம். அதற்காக தான் நான் சமுதாய மறுமலர்ச்சி தேவை என்கிறேன், சீர்திருத்தம் அல்ல.

சுவாதி: சமீபமாக திக்விஜய் சிங்க் அவர்கள் பிளான் A  (பாபா ராம்தேவ்),பிளான் B (அன்னா), பிளான் C (ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்) என்று கூறியிருக்கிறார்,இது போன்ற அரசியல் தலைவர்களின் கருத்துகள் தங்கள் மனதை காயப்படுத்துவதில்லையா?

ஸ்ரீ ஸ்ரீ: அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது... எல்லோருக்கும் தங்கள் கருத்துகளை சொல்ல உரிமையுண்டு, ஆனால் மக்களுக்கு உண்மை என்ன தெரியும்..     

சுவாதி: நாட்டில் எங்கும் பெருங்குழப்பம் நிலவுகிறது, மக்கள்  அமைதியற்றவர்களாக இருகிறார்கள்,பாராளுமன்றத்தில் இன்னும் லோக்பால் மசோதா உறுதி செய்யவில்லை...விவசாய துறை அமைச்சர் சரத் பவரை இளைஞர் ஒருவர் அறைய முயற்சி செய்கிறார், இதையெல்லாம் பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

ஸ்ரீ ஸ்ரீ: இன்று மொத்த சமுதாயமும் ஒரு அமைதியற்ற சூழ்நிலையில் இருக்கிறது. இந்த சூழ்நிலை மாறும் தன்மை கொண்டது, இது வரும்,போகும். பிறகு ஒரு புதுபிக்கப்பட்ட வலிமையுடனும்,உற்சாகத்துடன் செயல்படும்.

சுவாதி: தேர்தலை எதிர்நோக்கி கொண்டிருக்கும்

உத்தர் பிரதேஷ்யில் நீங்கள் தொடர்ச்சியாக சத்சங் நிகழ்ச்சிகளை நடத்திய போது எவ்வாறு உணர்ந்தீர்கள்?

ஸ்ரீ ஸ்ரீ: இது ஒரு மக்களின் யாத்ரா, சொன்பாட்ற, சமுழி போன்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்கள் 35  கிலோமீட்டர் நடந்தே வந்து இந்த யாத்ராவில் கலந்து கொண்டார்கள், அவர்கள் லஞ்சம் வாங்கவோ கொடுக்கவோ மாட்டோம் என்று உறுதி மொழி எடுத்து கொண்டார்கள். இத்தகைய கூட்டத்தை காண மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆன்மீக மறுமலர்ச்சியால் தான் மக்களால் சட்ட ஒழுங்கையும், ஒழுக்கத்தையும் கடைபிடிக்க முடியும்.

சுவாதி: அன்னா ஹசாரே பற்றி கூறப்படும் அவதூர்களை பற்றி உங்கள் கருத்து என்ன?

ஸ்ரீ ஸ்ரீ: இது எதிபார்த்த ஒன்று தான், லஞ்சத்தை பற்றியோ அல்லது அத்தகைய குற்றத்தை செய்பவர்களை எதிர்த்து செயல்பட்டால் இத்தகைய சோதனைகளை சந்திப்பது சகஜம் தான், உண்மை தான் பிரசங்கம் செய்பவர்கள் அதை பின்பற்றி தான் ஆக வேண்டும். நாம் தவறாக நடந்து கொண்டு அடுத்தவரை குற்றம் சாட்ட கூடாது. இது ஆராய பட வேண்டிய விஷயம். அதற்காக மடுவை மலையாக்க கூடாது. மற்ற ஊழல்களை பற்றியும் நாம் கவனிக்க வேண்டும், அதை விட்டு விட்டு, பயண செலவுகளை குறைத்தது போன்ற சின்ன விஷயங்களை எல்லாம் பெரிதுபடுத்த கூடாது. எதிர்க்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. அப்பழுக்கற்ற தன்மை இருக்க வேண்டும்.

சுவாதி: ஆம் ஆத்மி என்பது வெறும் கோஷம்தானா?

ஸ்ரீ ஸ்ரீ: நீங்கள் ஆம் ஆத்மி அனுதாபியென்றால் அதன் கோஷத்தை பற்றி கவலை படாதீர்கள், சராசரி மனிதனின் தேவைக்காக என்ன செயலாற்ற முடியுமோ அதை செயல்படுத்த வேண்டும்..

சுவாதி: நாட்டில் விலையேற்றம் மற்றும் பணவீக்கம் சாதாரண மக்களை மிகவும் பாதித்துள்ளது...

ஸ்ரீ ஸ்ரீ: கண்டிப்பாக காலத்தின் அடிபடையில் சில பிரச்சனைகள் வலுத்துள்ளது, ஆனால் நாமும் அதற்கு பொறுபேற்று கொள்ள வேண்டும், குற்றம் சாற்றுவதை நிறுத்தி அதற்குண்டான தீர்வை தேட வேண்டும். ஒரு பிரச்சனையை பற்றி வருந்தாமல் அதை தீர்க்கும் வழியை கண்டுபிடிக்க வேண்டும்.

சுவாதி: மாற்றம் ஏற்பட்டால் அது நல்லதாக இருக்குமா ?

ஸ்ரீ ஸ்ரீ:  நன்மையில் நம்பிக்கையற்றவர்களாக மக்கள் மாறிவிட்டார்கள். அவர்கள் நம்பிக்கையை தொலைத்து விட்டார்கள். அதனால் அவர்கள் வோட்டு போட போவதில்லை. நாங்கள் அவர்களை வாக்களிக்க செல்ல வேண்டும் என்றே கூறுகிறோம். இன்றைய இளைஞர்களால் மிக பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்பது என் கருத்து. இந்நாட்டின் எதிர்காலம் இளைஞர்களிடம் தான் உள்ளது. அவர்களிடம் தான் இந்நாட்டை மாற்ற கூடிய சக்தி இருக்கிறது.  

சுவாதி: தேசத்தின் மிக பெரிய பிரச்சனையாக எதை கருதுகிறீர்கள்?

ஸ்ரீ ஸ்ரீ: ஊழல், பணவீக்கம் மற்றும் மதுபழக்கம்..

சுவாதி: மக்களுக்கு இன்று சமயசார்பற்ற சமுதாயத்தில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது..  இது எதுவரை நிலைக்கும்?

ஸ்ரீ ஸ்ரீ: குடிமுறை சமுதாயத்தில் ஆயிரகணக்கான மக்களுக்கு ஆயிரமாயிரம் யோசனைகள் தோன்றும், கூட்டமைப்புகுள் கூட்டமைப்பு வைக்க இயலாது. ஆனால் கொள்கை ஒன்றாக இருக்க வேண்டும். இப்பொழுது நமக்கு தேவை லோக்பால் மசோதா மட்டுமே.

சுவாதி: லோக்பால் மசோதா ஒரு மந்திரக்கோலா?

ஸ்ரீ ஸ்ரீ: லோக்பால் மசோதா மட்டுமே தேசத்தில் இருக்கும் ஊழல்களையும், அரசியலையும் மற்றும் இன்ன பிற பிரச்சனைகளையும் தீர்த்து விடாது... மக்களுக்குள் ஏற்படும் ஒற்றுமை உணர்வே இதற்கான தீர்வு.

சுவாதி:  நீங்கள் எந்த தலைவரை நம் நாட்டின் நம்பிக்கைக்குரியவர் என்று தேர்ந்தெடுப்பீர்கள்?

 

ஸ்ரீ ஸ்ரீ: அது மக்கள் எடுக்க வேண்டிய முடிவு, ஒருவரை நன்றாக எடை போட்டு நல்லது எது, கெட்டது எது என்று முடிவு செய்து தேர்ந்தெடுக்க வேண்டும். சாதி சமயம் பார்த்து தேர்ந்தெடுக்க  கூடாது. பணத்திற்காகவும் தேர்ந்தெடுக்க கூடாது.

சுவாதி: நாட்டிற்கும் இங்குள்ள தலைவர்களுக்கும் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

 

ஸ்ரீ ஸ்ரீ: உங்களுடைய நாட்டை முதன்மை படுத்துங்கள்,எல்லாவற்றிற்கும் மேலாக முதன்மை படுத்துங்கள். மனிதத்தன்மை மட்டுமே நாட்டின் செழிப்புக்கு வழி வகிக்கும்.