வாழ்கை வரலாறு (சுருக்கம்)
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் அவர்கள் மனித நேயம் மிக்க, ஆன்மிகத் தலைவர். சமாதானத் தூதர். மன அழுத்தமற்ற, வன்முறையற்ற, சமுதாயத்தை உருவாக்கும் அவரின் பார்வை உலகின் லட்சக்கணக்கான மக்களை, அவரின் சேவை திட்டங்கள் மூலமாகவும், வாழும்கலை பயிற்சி மூலமாகவும் ஒன்று சேர்த்து இருக்கிறது.
தொடக்கம்
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தென்னிந்தியாவில் 1956ல் பிறந்தார். நான்கு வயதாகுமபொழுது, பழமைவாய்ந்த ஒரு வேதப் புத்தகமான பகவத்கீதையிலிருந்து சில பகுதிகளை வரிசையாக கூறுவார். அடிக்கடி தியானத்திலும் காணப்படுவார். மகாத்மாகாந்தியுடன் பலகாலமாக தொடர்பு கொண்ட சுதாகர் சதுர்வேதி என்பவரே இவரின் முதல் ஆசிரியர். 1973 -ல் 17 வயதாகும்பொழுது ,வேத இலக்கியாம் , பெளதிகம், இரண்டிலும், பட்டதாரி ஆனார்.
வாழும்கலை மற்றும் ஐ ஏ ஹ் வீ தொடக்கம்
இந்தியாவில் , கர்னாடக மாநிலத்திலுள்ள, ஷிமோகாவில், ஸ்ரீ ஸ்ரீ 10 நாட்கள் மௌனத்தில் ஈடுபட்டார். சுதர்சன் க்ரியா என்னும் உத்தி பிறந்தது. நாளிடைவில், சுதர்சன் க்ரியா வாழும்கலை பயிற்சிகளில் மையமாக ஆனது.
ஸ்ரீஸ்ரீ வாழும்கலையை சர்வதேச அளவில் லாபமற்ற, கல்வியை வளர்க்கும், மனித நேயமிக்க ஸ்தாபனமாக்கினார். இதன் கல்வி, மற்றும் சுயமுன்னேற்ற நிகழ்ச்சிகள் மன அழுத்தத்தை நீக்கி, நல்வாழ்வுக்கு ஆதரவு அளிக்கிறது. குறிப்பிட்ட ஒரு சாராருக்கு மட்டுமின்றி, இந்த பயிற்சிகள் உலகம் முழுவதும், சமுதாயத்தின் எல்லா தரப்பினருக்கும் சக்தி வாய்ந்த ஒன்றாக நிருபிக்கப்பட்டுள்ளது. 1997 -ல் அவர் இன்டர்நேஷனல் அச்சொசியாடின் பார் ஹ்யுமன் வேல்யுஸ் (மனித விழுமங்களின் சர்வதேச கூட்டமைப்பு) ன்னும் சர்வதேச அமைப்பை ஏற்படுத்தினார். அவர், நிலையான வளர்ச்சி திட்டங்களை ஒருங்கினைத்து , மனித மதிப்புகளை வளர்த்து மற்றும் மனித முரண்பாடுகளை குறைக்க வாழும் கலை கழகத்துடன் இணைந்து ஒருங்கிணைக்க மனித கலாச்சாரம சர்வதேச சங்கம் (IAHV) நிறுவினார். இந்தியா, ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில், இரண்டு சகோதர நிறுவனங்களின் தொண்டர்கள் கிராமப்புற சமூகங்களில் நிலையான வளர்ச்சி திட்டங்களை நடத்தி ஏற்கனவே 36,000 கிராமங்களுக்கு மேல் பயன்பெற்றுள்ளார்கள்.
சேவை மனப்பான்மையை ஊக்குவித்தலும், ஞானத்தை உலக மயமாக்கலும்:
மனிதநேயமிக்க தலைவரான ஸ்ரீஸ்ரீயின் நிகழ்ச்சிகள் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்கள், தீவிரவாதிகளின் தாக்குதல் மற்றும் சண்டை, இவற்றிலிருந்து உயிர் தப்பியவர்கள், நடுத்தர வர்க்கத்திலுள்ள குழந்தைகள், மாறுபட்ட கருத்துடைய சமூகத்தினர் இவர்களுக்கு மிகப் பெரிய அளவில் உதவியை அளித்துள்ளது. அவருடைய செய்திகளின் பலம் இவ்வுலகம் முழுவதும் முக்கியமான இடங்களில் இந்தத் திட்டங்களை நடத்திச் செல்லும் மிகப்பெரிய அளவிலான தொண்டர்கள் மூலம், ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு, சேவை மனப்பான்மையை தூண்டியுள்ளது . ஆன்மீகத் தலைவராக, ஸ்ரீஸ்ரீ அவர்கள், பாரம்பர்யமான யோகா, தியானம் இவற்றைத் திரும்பக் கொண்டு வந்தார். 21 ஆம் நுற்றண்டுக்கு ஏற்றவாறு கொடுத்துள்ளார். பழமையான ஞானத்திற்கு உயிர் ஊட்டியதோடு மட்டுமின்றி, தனிப்பட்ட மற்றும் சமூக மாற்றத்திற்காக புது முறைகளை ஏற்படுத்தினார். இதில் சுதர்சன க்ரியாவும் அடங்கும். மன அழுத்தத்திலிருந்து விடுபடவும், அன்றாட வாழ்வில் உள்ளிருக்கும் சக்தி, அமைதியை காணவும் பல இலட்சக்கணக்கான மக்களுக்கு இது உதவுகிறது. 29 வருடங்களில் 151 தேசங்களில் இவருடைய நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது.
சமாதானத்தின் உருவம்
சமாதானத் தூதுவராக, ஸ்ரீ ஸ்ரீ,முரண்பாடுகளைத் தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார். உலகம் முழுவதும் பொது மன்றங்களிலும், கூட்டங்களிலும் அஹிம்சையின் நோக்கத்தை பரப்புகிறார். அமைதியாக, நடுநிலை வகிப்பவராக, முரண்பாடுகளுடன் இருப்போரிடையே நம்பிக்கையை ஊட்டுகிறார். ஈராக், ஐவரி கோஸ்ட், காஷ்மீர்,பீகார் முதலான இடங்களில் எதிர் கட்சிகளை பேச்சு வார்த்தைக்காக அழைத்ததில் தனிப்பட்ட பாராட்டைப் பெற்றார். ( கர்நாடக அரசு, இநதியா ) வினால் கொண்டாடப்பட்ட கிருஷ்ணதேவராயரின் 500 வது கொண்டாட்டங்களின்போது, ரிசப்ஷன் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஸ்ரீஸ்ரீ அமர்நாத் ஷ்ரெயின் போர்டின் உறுப்பினரும் ஆவார் (ஜம்மு & காஷ்மீர் அரசால் நியமிக்கப் பட்டார்). அவருடைய முயற்சிகளாலும், பேச்சுக்களாலும் , ஸ்ரீஸ்ரீ மனிதநேயத்தின் தேவையை வலியுறுத்தி, மேலும் வலுப்படுத்தி, நம் மிகப் பெரிய அடையாளமாக மனிதாபிமானத்தை உணர்த்திக் கொண்டிருக்கிறார்.
உலகை சுற்றியுள்ள பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை அவரது சேவை, தேசிய இனம், மதம் இவற்றைக் கடந்து"ஓர் உலகக் குடும்பம்" (ஒன் வேர்ல்ட் பாமிலி ) என்னும் செய்தியோடு ஐக்கியபடுத்தியுள்ளது. உள் மற்றும் வெளி அமைதியை நிலை நாட்ட முடியும்; மற்றும் மன அழுத்தமற்ற, வன்முறையற்ற சமுதாயத்தை,சேவையின் மூலமாகவும்,மனிதநேயத்தை திரும்பவும் எழுப்புவதின் மூலமாகவும் உருவாக்க முடியும் என்பதை இவரின் சேவை திட்டங்கள் காட்டி உள்ளன.